இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஐந்து பேருக்கு கொரோ னா! விடுக்கப்பட்டுள்ள எச் ச ரிக்கை

கம்பஹா - மிரிஸ்வத்த, மெதவத்த பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.குறித்த இறுதிச் சடங்கில் அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் ஏழு பேர் கலந்துகொண்டிருந்த நிலையில் அவர்களில் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஐந்து பேரும் மினுவாங்கொட வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 27ம் திகதி இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் தங்களது வீடுகளில் சுயத்தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இறுதிச் சடங்கு நடைபெற்ற மெதவத்த பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள வீட்டிலும் கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post