கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் தந்தைக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் தந்தையொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த நபர் தற்போது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சென் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.அதேநேரம் அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.
Previous Post Next Post