யாழை பூர்வீகமாககொண்ட மாணவிக்கு லண்டனில் நேர்ந்த துயரம்!

லண்டனில் யாழை பூர்வீகமாககொண்ட 19 வயதான மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் Queens mary's பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியான சிறிஸ்கந்தராஜா மதுஜா என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த மாணவி மதுஜா நற்பண்புகளுடன் கல்வியிலும் சிறந்து விளங்கியவர். இவரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினை மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியினையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை உயிரிழந்த மாணவியின் தந்தையார் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றின் முக்கிய பதவியில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post