தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவுதிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு; உடன் பதிவு செய்யுங்கள்

தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவுதிகள், தமது பெயர்களை மாவட்ட செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொழில் கேந்திர நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தேசிய மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.



அதன்படி, அனைத்து மாவட்ட செயலகங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்களை திணைக்களம் நிறுவியுள்ளது.

இதுதொடர்பில் மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்கள் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் http://dome.gov.lk/web/index.php?lang=en என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமாகவோ வேலை தேடுபவர்கள் தம்மை வேலை தேடுபவராக பதிவு செய்யலாம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



அவ்வாறு பதிவுசெய்தவர்கள் வெற்றிடங்களுக்கு பரிசீலிக்கப்படுவார்கள். மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தனியார் துறையில் உள்ள வெற்றிடங்களுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள்.

மாவட்ட செயலகங்களில் நிறுவப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்கள் மூலம் பதிவு செய்ய விரும்பும் இளையோர்கள் அந்த நிறையங்களைத் தொடர்புகொண்டு முன்கூட்டியே சந்திப்பு செய்ய வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள் வருமாறு;

01.கொழும்பு011-2369258

02.கம்பஹா033-2248990

03.களுத்துறை034-2236162

04.காலி091-2233906

05.மாத்தறை041-2231319



06.ஹம்பாந்தோட்டை047-2242766

07.கண்டி081-2068229

08.மாத்தளை066-2222824

09.நுவரெலியா052-2224186

10.கேகாலை035-2221733

11.இரத்தினபுரி045-2232996

12.குருநாகல்037-2221402

13.புத்தளம்032-2266253

14.பதுளை055-2228030

15.மொனராகலை055-2277248

16.அநுராதபுரம்025-2234988

17.பொலன்னறுவை027-2056715

18.அம்பாறை063-2222233

19.மட்டக்களப்பு065-2227193

20.திருகோணமலை026-3209245

21.யாழ்ப்பாணம்021-2219359

22.வவுனியா024-2228025

23.மன்னார்023-2222232

24.கிளிநொச்சி021-2283966

25.முல்லைத்தீவு021-2290037

அனைவருக்கும் பயன்பெறும் வகையில் முடிந்தவரை பகிருங்கள் .

Previous Post Next Post