உடம்பில் கொழுப்பை சட்டென கரைக்க வேண்டுமா? இந்த அற்புத பானங்களை தவறமால் குடிச்சாலே போதுமாம்

எடையைக் குறைக்கவே நம்மில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

எடையை குறைப்பதற்கு சிகிச்சை, அறுவை சிகிச்சை என்றெல்லாம் போகாமல் இயற்கைமுறையில் கூட உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்க முடியும்.அதற்கு சில இயற்கை பானங்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  1. ஒரு ஸ்பூன் சோம்பை 2 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுக்க ஊறவிட வேண்டும். அந்த நீரை காலையில் எழுந்ததும் வடிகட்டி குடிக்க வேண்டும்.

  2. இரண்டு ஸ்பூன் ஓமத்தை அரை லிட்டர் தண்ணீரில் இரவு முழுக்க ஊற விட வேண்டும். இந்த நீரை காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த நீரை கொதிக்க வைத்து டீ போலவும் குடிக்கலாம். இது உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க செய்யும்.

  3. க்ரீன் டீயில் அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால் இது உடலில் உள்ள கொழுப்புகளை அழிக்க உதவுகிறது.

  4. அரை லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து இரவு முழுக்க ஊற வைத்து காலையில் அதை கொதிக்க விட்டு, பின் வடிகட்டி குடித்து வர ஜீரண சக்தியும் அதிகரிக்கும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் குறையச் செய்யும்.

  5. தண்ணீர் அதிகமாகக் குடிக்கும்போது உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும். அதில் கெட்ட கொழுப்புகளும் சேர்ந்து தான் வெளியேறும். அதோடு உடலில் உள்ள கொழுப்புகள் எரிக்கப்பட்டு எனர்ஜியாக மாற்றப்படும்.
Previous Post Next Post