மேற்படி சுவரொட்டியில் அடக்குமுறைக்கு துணை போனவர்களையும் அடையாளம் காண்போம்..
அடக்குமுறையாளர்களை மட்டுமல்ல,
அவர்களுக்கு துணை போனவர்களையும் அழிப்போம்,
ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்..
எனும் வாசகம் காணப்படும் அதேவேளை
மேற்படி சுவரொட்டியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, கேகலியா ரம்புக்கெல மற்றும் ராணுவ தளபதி ஜகத் டயஸ் மற்றும் அரச அதிகாரிகளுடன் இணைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், பிள்ளையான் எனும் சந்திரகாந்தன், புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மான் எனும் விநாயகமூர்த்தி முரளிதரன், சுவிஸ் நாட்டில் வதியும் சுவிஸ்ரஞ்சன் எனும் சொக்கலிங்கம் ஆகியோரின் புகைப்படங்களும் காணப்படுகிறது.
மேற்படி சுவரொட்டியானது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.