இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க! உங்கள் கிட்னியை சேதப்படுத்துமாம்.. உஷார்

மனித உடலின் போர்வீரர்களாக செயல்படும் சிறுநீரகங்கள், உடலில் இருந்து கழிவுகள் மற்றும் கூடுதல் திரவத்தை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இரத்தத்தில் உள்ள நீர், உப்பு மற்றும் தாதுக்களின் ஆரோக்கியமான சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றது.

இதனை பாதுகாப்பாக வைத்து கொள்வது அவசியமான ஒன்று. குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.


தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.


பன்றி இறைச்சி, பர்கர் பஜ்ஜி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் கணிசமான அளவு சோடியம் மற்றும் புரதம் அதிகளவில் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போதும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் சிறுநீகரகங்களில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்குவதோடு இரு சிறுநீரகங்களும் ஆரோக்கியமற்றதாக மாறுகிறது.

சோடாவில் டையட் சோடா என்ற சோடியம் அதிகளவில் உள்ளது. இதை பருகும் போது அதிகமான உப்பு உடலில் தேங்கி சிறுநீரகத்தை பாதிக்கிறது.

உறைந்த உணவுகள் நீண்ட நாள்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கவும், உணவின் தன்மை, வைட்டமின் போன்றவை மாறாமல் இருக்க சுமார் 18 டிகிரி செல்சியஸில் உறையவைக்கப்படுவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது.

உங்களது இதயம் மற்றும் சிறுநீரகங்களை பாதுகாப்பாக இருக்க சிப்ஸ், உருளைக்கிழங்கு போன்ற வறுத்த உணவுகள் உட்கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

மயோனைஸில் கலோரிகள், சோடியம், சர்க்கரை அதிகளவில் உள்ளதால் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கொழுப்பு நிறைந்த வெண்ணெய், அவகோடா, உப்பு,வேர்க்கடலை, காபி, சிவப்பு இறைச்சி, அதிக இனிப்புகள் உள்ள குக்கீஸ்கள் போன்ற உணவுப் பொருள்களையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் உங்களது சிறுநீரகத்தில் பல பாதிப்புகள் ஏற்படும்.
Previous Post Next Post