குரு வக்ர பெயர்ச்சியின் உக்கிர ஆட்டம் - அடுத்த 100 நாட்கள் ஆபத்தில் சிக்கும் 4 ராசிகள்! யார் யாருக்கு எச்சரிக்கை

குருவின் வக்ர பெயர்ச்சி ஜோதிடத்தில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

பொதுவாக கிரகங்கள் வக்ரமாகும் போது, அதனால் கிடைக்கும் நற்பலன்கள் தாமதமாவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும்.

மீன ராசியில் பயணித்து வந்த குரு பகவான் ஜூலை 29 ஆம் திகதி வக்ரமாக மாறி பயணிக்க ஆரம்பித்துள்ளார்.
குரு வக்ர நிலையில் 2022 நவம்பர் 24 ஆம் தேதி வரை இருப்பார். எனவே 100 நாட்களுக்கு மேல் சில ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று துயரம் நிறைந்தாக இருக்கும். எனவே இந்த காலகட்டத்தில் செலவுகள் சற்று அதிகரிக்கலாம். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. தேவையற்ற செலவுகளால் நிதி பிரச்சனையை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

பரிகாரம் - குருவின் வக்ரத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்குரிய மந்திரத்தை சொல்லி, மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்யுங்கள். மேலும் சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யுங்கள்.


சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இந்த 8 ஆவது வீடு நோய் மற்றும் மரணத்தின் வீடாகும். ஆகவே ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள், குறிப்பாக சர்க்கரை நோய், கல்லீரல் நோய் உள்ளவர்கள் இக்கால கட்டத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பரிகாரம் - சிம்ம ராசிக்காரர்கள் புஷ்பராக மோதிரத்தை அணிவது நல்லது. அதோடு சனி பகவானுக்குரிய மந்திரங்களை சொல்ல வேண்டும். மேலும் சனியுடன் தொடர்புடைய பொருட்களை தானம் செய்வது நல்லது.

துலாம்

குரு வக்ரமாக இருப்பதால், இந்த காலம் சற்று மோசமான காலமாக இருக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது வயிறு தொடர்பான நோய்கள் ஏதேனும் இக்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது.

பரிகாரம் - சனி பகவானுக்கு நல்லெண்ணெய்/கடுகு எண்ணெய் அபிஷேகம் செய்தால், நற்பலன் கிடைக்கும்.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டில் குரு வக்ரமாக இருப்பதால், இக்காலம் மிகவும் வேதனை நிறைந்த காலமாக இருக்கும். மேலும் இக்காலத்தில் மகர ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்கால கட்டத்தில் தொண்டை பிரச்சனைகள், தைராய்டு பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க வாய்ப்புள்ளது. அதோடு உங்களின் தைரியமும், வீரமும் சற்று குறையலாம்.

பரிகாரம் - குரு வக்ர பெயர்ச்சியின் மோசமான பலன்களைத் தவிர்க்க, குரு பகவானுக்குரிய மந்திரங்களை சொல்ல வேண்டும். மேலும் வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்குரிய மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
Previous Post Next Post