மின்வெட்டு தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு!

வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்காக நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 62 வீதமாக அதிகரித்துள்ள நிலையில், குறித்த அறிவிப்பு விடுக்கப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இதனிடையே நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை மூன்று மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

A முதல் L வரையான வலயங்களிலும்,முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு 3 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய குறித்த வலயங்களில் நண்பகல் வேளைகளில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், குறித்த வலயங்களில் இரவு வேளைகளில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post