கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெரணியகல பகுதியில் வைத்து அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், சமன்புரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.
அதேநேரம், கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்னவுக்கு, கொழும்பு - கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
ரதிந்து சேனாரத்ன மற்றும் டிலான் சேனாநாயக்க ஆகியோர் நேற்று முன்தினம் பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இதனையடுத்து, கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு பிரவேசித்து ரதிந்து சேனாரத்னவை கைதுசெய்தனர்.
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவை மீறிய சம்பவம் தொடர்பில் ரதிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை கொழும்பு - கோட்டை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, நீதவான் அவருக்கு பிணை வழங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.