கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு நிதி வழங்கிய பணக்கார குடும்பம்! எத்தனை கோடி தெரியுமா?

இத்தாலி நாட்டவர்கள் கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியின் மிகப்பெரிய பணக்கார குடும்பமான அக்னெல்லி குடும்பத்தார் இத்தாலி அரசுக்கு 10 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 81 கோடி ரூபாய்) மற்றும் 150 வென்ட்டிலேட்டர்களை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.

இந்த தகவல் வைரலானதில் இணையத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

You might also like