கொரோனா வைரஸால் பெயரை மாற்றிக்கொண்ட இந்திய வீரர் அஸ்வின்..! நெகிழ வைக்கும் காரணம்

0
43

கொரோனா நோய்த்தொற்று தீவிர்க்க மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே இருக்கும் படி அறிவுறுத்தும் வகையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பெயரை மாற்றினார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், மக்களிடம் சமூக இடைவெளி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அஸ்வின் இவ்வாறு ட்விட்டர் பெயரை மாற்றியுள்ளார்.

‘வீட்டிற்குள் இருப்போம் இந்தியா’ என இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ட்விட்டர் பெயரை மாற்றியுள்ளார்.

இந்தயாவில் கொரேனாவிற்கு 10 பேர் பலியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.

கொரோன பரவுவதை தவிர்க்கும் விதமாக அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய மக்கள் கடைபிடித்த சுய ஊரடங்கை பாராட்டிய அஸ்வின், இது போல் சமூக இடைவெளி தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here