ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை உயரும்போதும் கொரோனா பரவுவது குறையும்: சீன ஆய்வாளர்கள்!

0
37

ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை உயர்வும், ஒவ்வொரு சதவிகித ஈரப்பத உயர்வும், கொரோனா பரவுவதை குறைக்கும் என சீன ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

உயரும் வெப்பநிலையும், அதிகரிக்கும் ஈரப்பதமும் உலகம் முழுவதும் கொரோனா பரவுவதை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ள புதிய ஆய்வு ஒன்று, அதே நேரத்தில், பருவநிலை மட்டுமே கொரோனாவை தடுத்தி நிறுத்திவிடும் என்று கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளது.

100 சீன நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்துள்ளதோடு, ஈரப்பதமும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கொரோனா பரவும் வீதம் குறைந்துள்ளதை, Beihang மற்றும் Tsinghua பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

உயரும் வெப்பநிலையும், அதிகரிக்கும் ஈரப்பதமும் கொரோனா பரவுவதை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது என்றே அந்த ஆய்வை மேற்கொண்டுள்ளவர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பும், நீண்ட நாட்களாகவே, வெப்பம் இவ்வகை வைரஸ்களை கொன்றுவிடும் என்பதால், அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்துவிடும் என்று மக்களை உற்சாகப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், சுகாதாரத்துறை நிபுணர்களும், புதிய ஆய்வும், உயர் வெப்ப நிலைகளைத் தாக்குப்பிடிக்காது என்று கூறினாலும், வெப்பமும் ஈரப்பதமும் கொரோனா தொற்று பரவும் வீதத்தை குறைக்குமே ஒழிய, முற்றிலும் தடுக்காது என்றும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here