விசு சொன்னதை கேட்டு கண்ணீர் விட்டு அழுத பெண்! உண்மையில் நடந்த சம்பவம்

0
30

நடிகர், இயக்குனர், பேச்சாளர் என பன்முக திறமைகள் கொண்ட சினிமா பிரபலம் விசு அண்மையில் காலமானார். அவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை உண்டாக்கியது.

அவரின் மறைவுக்கு ரசிகர்கள் கவலை தெரிவித்தனர், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் சிலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால் பலர் சமூக வலைதளத்திலேயே இரங்கல் தெரிவித்தனர்.

அவரை பற்றிய சுவாரசியமான விசயம் இதோ…
1970 களின் ஆரம்ப காலகட்டத்தில் விசு டிராவல் ஏஜெண்டாக இருந்தாராம். அப்போது அவர் பள்ளி ஆசிரியைகள் 40 பேரை அழைத்துக்கொண்டு இலங்கை சென்றாராம்.

அங்கு கதிர்காமம் முருகன் கோவிலின் அருகே அமர்ந்து கதை எழுதிக்கொண்டிருந்தாராம். பக்கத்திலிருந்த ஆசிரியை ஒருவர் அவரிடம் வந்து தூக்கம் வரவில்லை, நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் கதையை சொல்லுங்கள் என அவரிடம் கேட்டாராம்.

அதை கேட்டு விசு கதை சொல்ல, இறுதியில் அந்த பெண் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும் அந்த ஆசிரியை நீங்கள் டிராவல் ஏஜென்ட் மட்டுமல்ல, பெரியளவில் சாதிப்பீர்கள், கதிர்காமம் முருகன் கோவிலில் வைத்தி சொல்கிறேன் என கூறியுள்ளார்.

அந்த ஆசிரியை பெயர் உமா. இவரிடம் விசு நீங்கள் சொல்வது போல நான் பெரிய ஆள் ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு உங்கள் பெயரையே வைக்கிறேன் என கூறியுள்ளார்.

விசு எழுதிய அந்த கதை தான் சம்சாரம் அது மின்சாரம். இப்படத்தில் நடிகை லட்சுமியின் அந்த கதாபாத்திரத்திற்கு உமா என அந்த ஆசிரியையின் பெயரையே விசு வைத்தாராம்.

படத்தில் மட்டுமல்ல வாழ்நாளின் கடைசி வரை கூட தன் மனைவியை உமா என்றே விசு அழைத்தாராம்.

சம்சாரம் அது மின்சாரம் படம் விசுவுக்கு பெரும் வெற்றியை கொடுத்ததோடு அது அடையாளமாக மாறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here