விவாகரத்தான பிரபல ஜோடி கொரோனாவால் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்த சம்பவம்! புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு

கொரோனா வைரஸை எதிர்த்து உலகம் முழுக்க மக்கள் ஒன்றிணைந்து போராடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

நோய் தொற்று தீவிரமடைந்து வருவதால் மக்கள் கூட்டம் கூடாமல் தனித்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களும் வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர்.

படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஹிரித்திக் ரோஷன் கடந்த 2000 ம் வருடத்தில் ஃபேசன் டிசைனராக இருக்கும் சுசன்னேவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

பின் கருத்து வேறுபாட்டால் கடந்த 2013 ல் இருவரும் பிரிந்தனர். 2014 ல் விவாகரத்தும் பெற்று விட்டனர்.

அவரின் குழந்தைகள் ஹிருத்திக்குடன் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸால் மகன்களை காக்க குடும்பத்துடன் இணைந்துள்ளாராம்.

இதனால் நடிகர் ஹிரித்திக் சுசன்னேவுக்கு நன்றி தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

You might also like