நேற்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி… இன்று டெஸ்கோ வாகன சாரதி: கொரோனாவால் மாறிய ஒரு தம்பதியின் வாழ்வு!

0
51

நேற்று வரை விமானியாக இருந்த கணவர், விமான பணிப்பெண்ணாக இருந்த மனைவி… கொரோனா பரவியதால் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட, Peter Loginஆல் சும்மா வீட்டில் உட்கார முடியவில்லை.

தான் ஒரு விமானி என்ற ஈகோ எல்லாம் இல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்க புறப்பட்டுவிட்டார்.

அவர் தேர்ந்தெடுத்த வேலை, டெஸ்கோ பல்பொருள் அங்காடி வாகன சாரதி வேலை. மனைவியுடன் ஹாயாக விமானத்தில் பறந்த Peter Login, டெஸ்கோவின் டெலிவரி பாயாக களத்தில் இறங்கிவிட்டார்.

அவரது மனைவி Marianne Whiston இன்னும் ஒரு படி மேலே போய், கொரோனாவுக்கெதிராக போராடும் மருத்துவமனையின் தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்துவிட்டார்.

தான் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் ‘To Fly To Serve’ என்னும் பிரிட்டிஷ் ஏர்வேஸின் மோட்டோவை சற்றே மாற்றி ToDriveToServe என வேடிக்கையாக குறிப்பிட்டிருக்கிறார் Peter Login.

அது 7,000 லைக்குகளை பெற, பலரும் விமானியாக இருந்துகொண்டு சர்வசாதாரணமாக டெஸ்கோ சாரதியாகிவிட்ட Peter Loginஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here