வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகை

0
28

வங்கிகளில் பத்து லட்சம் ரூபா தொடக்கம் 50 லட்சம் ரூபா கடன்களைப் பெற்றவர்கள் தாங்கள் மாதாந்தம் செலுத்தும் தவணைப் பணங்களைச் செலுத்தும் காலத்தை தற்போதைய

நிலையில் அரசாங்கம் பிற்போட்டுள்ளது. இது வங்கிகளில் தொழில் முயற்சிகளுக்கும், ஏனைய இதர செயற்பாடுகளுக்கும் கடன் பெற்றவர்களுக்கு ஒரு சாதகமான நிலமையாகும்.

எனினும் வங்கிகளுடாக மாதாந்த வேதனம் பெறும் அரச உத்தியோகத்தர்களின் பணம் அவர்கள் பெற்ற கடன்களுக்காக கணிணி தன்னியக்க சேவையூடாக கழிபடுவதனால் இவ்விடயத்தை தான் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதன் அடிப்படையில் இதற்குரிய தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனவின் மட்டக்களப்பு மவாட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அனைத்து வங்கிக் கிளைகளுக்கும், அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது. தாங்கள் பெற்ற கடன்களுக்கு வங்கியிலுள்ள தமது பணம் மாதாந்தம் தன்னியக்கமாகக் கழிபட்டால் அது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் உரிய வங்கிக் கிளை முகாமையாளருக்கு அறிவித்து அவ்வாறு கழிபடும் பணத்தை தடுக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here