இதுவரை தமிழ் நடிகர்களில் கொடுக்காத தொகையை அள்ளி கொடுத்த ராகவா லாரன்ஸ்.. குவியும் ரசிகர்களின் பாராட்டுக்கள்!

0
44

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்தன.

அதற்கேற்ப, கொரோனா தடுப்பு பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அந்த பணத்தை நடிகர் ரஜினியை வைத்து இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் தான் நடிக்கவிருப்பதாகவும் அதற்காக கிடைக்கும் சம்பளத்தில் அட்வான்ஸ் பணம் ரூபாய் 3 கோடியை பெற்று கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக வழங்க உள்ளதாகவும் நடிகரும் நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

அதில் பிரதமர் நிவாரண நிதி உதவியாக ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்தால் பாதிக்கப்பட்டு வேலைஇழந்த சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம், நடன இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், வாழ்வாதாரத்தை இழந்துவாடும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் சிவகார்த்திகேயன், அஜித் குமார் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். அதில் நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்திருந்தார். சிவகார்த்திகேயன் 25 லட்சமும் அளித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here