கஷ்டத்தில் அள்ளிக்கொடுத்த சூரி இன்று செய்த சிறப்பான காரியம்… மகிழ்ச்சியில் ஏழை மக்கள்

நடிகர் சூரி சமீபத்தில் தனது ஹொட்டலில் வேலை செய்த நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு கொடுத்த நிலையில், தற்போது வேலையில்லாமல் இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார்.

சூரி கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு, 25kg அரிசி 100 மூட்டைகளை வழங்கியுள்ளார்.

மேலும் துணை நடிகர்கள் சங்கத்திற்கு 25kg அரிசி 20 மூட்டைகளை வழங்கியுள்ளார். மேலும் தனது செலவில் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு இன்று உணவளிக்கவும் செய்துள்ளார்.

லாக் டவுன் என்பதால் குடும்பத்துடன் தனது நேரத்தினை செலவழித்து வரும் சூரி அவ்வப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகளையும் பதிவிட்டு வருகின்றார்

You might also like