யாழில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட 7 பேரின் உடல் நலம் குறித்து வைத்தியசாலை பணிப்பாளர் கூறிய தகவல்!

0
24

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 7 நோயாளர்களின் உடல் நலம் தேறி வருவதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில்; கொரோனா வைரஸ் தொற்று அற்ற சுகதேகிகளாக வீடுகளுக்கு திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்ட அவர் சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகரினால் யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது கொரோன நோயாளி ஜ.டி.எச் வைத்திய சாலைக்கும் இதன் பின்னர் இனங்காணப்பட்ட 6 பேரும் பொலநறுவை வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்கள் 7 பேருடைய உடல் நலம் தேறி வருவதாக இரு வைத்திய சாலையின் பணிப்பாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் முழுமையான சிகிச்சை முடிந்த பின் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் சுகதேகிகளாக வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார்.

இதனிடையே யாழில் முதலாவது கொரோனா தொற்று நோயாளியினது தாவடி வீட்டிற்கு நேற்றைய தினம் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here