பிரித்தானியாவில் அடுத்தடுத்து இடம் பெறும் சோகங்கள்! கொரோனாவால் மற்றொரு இளைஞன் பரிதாப மரணம்

0
37

புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவருமான அழகரத்தினம் ஜீவிதன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இரு தினங்களுக்கு முன்பாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் இறப்பதற்கு முன்னர் லண்டனில் பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் இதற்கு முன்னர் ஒரு சிலர் இறந்திரக்கலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here