இலங்கை மக்களுக்காக முன்மாதிரியாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி கோட்டபாய!

0
29

இம்முறை சிங்கள – தமிழ் புத்தாண்டு சாஸ்திர சம்பிரதாயங்களை மிரிஹானவில் அமைந்துள்ள வீட்டில் இருந்தே மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் இணைந்து இவற்றினை மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் காரணமாக ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு பிரிவினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மதித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சொந்த ஊருக்கு செல்லாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

இதற்கு முன்னைய காலங்களில் புத்தாண்டு சம்பிரதாய கடமைகளை தங்காலையில் அமைந்துள்ள கால்டன் வீட்டிலேயே சமகால ஜனாதிபதி மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் நாட்டு மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக ஜனாதிபதி செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here