அனைத்து அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் கால எல்லை நீடிப்பு

இலங்கை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி செய்யும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like