வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

0
40

முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுட்டிருந்த 15 பேர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுவருட சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டிருந்த 15 பேர் மீது முள்ளியவளை பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல ஆலயங்களில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆலயங்களில் திருவிழா உள்ளிட்ட பூஜை நடத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here