லண்டனில் இருந்து பெற்றோருக்கு போன் செய்து கொரோனா நிலவரம் குறித்து கேட்ட 26 வயது இளைஞன்! அடுத்த நாள் மாரடைப்பால் மரணம்

0
40

லண்டனில் 26 வயதான இந்திய இளைஞன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் கைதா சதீஷ் (26). இவர் உயர்படிப்புக்காக லண்டனுக்கு கடந்தாண்டு ஜனவரி மாதம் சென்றார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பெற்றோருக்கு போன் செய்த சதீஷ் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்ததோடு தான் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அடுத்தநாளான நேற்று ஞாயிறு அன்று காலை சதீஷ் தனது அறையில் இருந்த படுக்கையில் இருந்து கீழே விழுந்துள்ளார். ஆனால் அவரின் அறை கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் சதீஷின் நண்பர்கள் அதை திறக்க முடியவில்லை.

இதையடுத்து பொலிசாருக்கு உடனடியாக அவர்கள் தகவல் கொடுத்த நிலையில் பொலிசார் வந்து கதவை உடைத்து சுயநினைவின்றி கிடந்த சதீஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டார் என கூறினார்கள்.

இந்த தகவல் சதீஷின் பெற்றோர் மற்றும் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

26 வயதில் மாரடைப்பால் திடீரென சதீஷ் இறந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையில் சதீஷின் உடலை லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர தெலுங்கானா அரசு உதவ வேண்டும் என அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here