இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் சற்று முன்னர் ஒருவர்

0
48

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரேனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

தற்சமயம் 155 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிக்கப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மருத்துவமனைகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவான தொற்றுறுதியாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை உள்ளது.

மட்டக்களப்பு மற்றும் காத்தான் குடி மருத்துவமனைகளில் பரிசோதனை உபகரணங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாளவானோர் கண்காணிப்பு மத்திய நிலையங்களில் இருந்தே தொற்றுறுதியாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.

ஆகவே மட்டக்களப்பு மற்றும் வெளிகந்தையில் பி.சி.ஆர் உபகரணங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் வரையில் 431 பேரின் உயிரியல் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றில் 216 பேரின் உயிரியல் மாதிரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபடாதவர்கள் என அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பொதுமக்கள் சமூக இடைவெளியினை பேணுவதன் அடிப்படையில் நாட்டில் இருந்து முழுமையாக இந்த கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த முடியும்.

அவ்வாறில்லையாயின் நாட்டில் இது பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here