கொரோனா வைரஸ் மற்றவர்களை தொற்றுவது எப்படி? புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு! இலங்கை பேராசிரியர் தகவல்

கொரோனா வைரஸ் தொற்றுடைய ஒருவரிடமிருந்து 4 மீற்றர் தூரம் வரை பரவல் காணப்படும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக நரம்பியல் அமைப்பின் பொது மக்கள் வழிப்புணர்கள் தொடர்பிலான உலக அமைப்பின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹானில் ஆய்வாளர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்விற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நோயாளி தங்கியிருக்கும் வைத்தியசாலையின் அறை, பயன்படுத்திய கழிப்பறை, பயணித்த பாதைகள், கையினால் பிடித்த பொருட்கள் ஆகியவற்றில் இந்த கொரோனா தொற்றியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நோயாளிக்கு சிகிச்சையளித்த வைத்தியரின் கணினி மற்றும் கணினியின் பாகங்களிலும் கொரோனா தொற்றியிருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் வைத்தியர்களின் பாதணிகளில் கொரோனா பரவியிருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இலங்கையில் சிறந்த முறையில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எவரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும் மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like