இலங்கையில் கொரோனாதொற்று எண்ணிக்கை 244 ஆக உயர்வு! 160 பேர் சிகிச்சையில்

0
31

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று தொற்றுக்குள்ளாகியவர்களில் மூவர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர். இம்மூவரும் பெண்களாவார்.

நேற்று கொரோனா பாதிப்புக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று அறுவர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 160 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 148 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று தொற்றுக்குள்ளாகியவர்களில் மூவர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர். மூவரும் பெண்களாவார்.

நேற்று கொரோனா பாதிப்புக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று மேலும் நால்வர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 238 இலிருந்து 242 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 158 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 148 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here