கொரோனாவால் துவண்டுள்ள அமெரிக்காவை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு தமிழனிடம் ஒப்படைப்பு!

0
41

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ள பொருளாதார புத்தாக்க மீட்டெழுச்சி குழுவில் சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா உட்பட ஆறு இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர்.

தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.

இதன் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளநிலையில் வீழ்ந்த அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய குழு ஒன்றை அதிபர் ட்ரம்ப் அமைத்துள்ளார் .

‘மாபெரும் அமெரிக்கப் பொருளாதார புத்தாக்க மீட்டெழுச்சி தொழிற்துறை குழு’ என அழைக்கப்படும் இந்தக் குழு அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அறிவுரைகளை அமெரிக்க அரசிற்கு வழங்க உள்ளது.

இந்தக் குழுவில் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, மாஸ்டர் கார்டிலிருந்து அஜய் பங்கா, ஆன் முகர்ஜி ஆகிய ஆறு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here